அங்கொடைக்கு வந்த, 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘மெத்தம்பேட்டமைன்’ மாத்திரைகள்: சுங்கப் பிரிவிடம் சிக்கின

🕔 November 3, 2022

பெருமளவிலான ‘மெத்தம்பேட்டமைன்’ (methamphetamine) மாத்திரைகளை (ஐஸ் போதைப் பொருள்) மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி 49 மில்லியன் ரூபா என, சுங்கப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இருந்து அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியில் இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

2 கிலோகிராம் வரை எடையுள்ள 4,956 மாத்திரைகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக சுதத்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்