மக்களுக்கு எரிச்சல், இடையூறு ஏற்படுத்தாதவாறு, விகாரையில் ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 31, 2022

பொல்ஹெங்கொட – அலன் மதினியாராமய விகாரையை அண்மித்த மக்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துமாறு, உடுவே தம்மாலோக தேரருக்கு – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஆஜரானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்