திருட வந்த இடத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி பார்த்தவாறே படுத்துறங்கிய திருடர்கள்: வட்டுக்கோட்டையில் சம்பவம்

🕔 October 27, 2022

வீடொன்றின் உரிமையாளர்கள் இல்லாத இரவு நேரத்தில் திருடுவற்காகச் சென்றவர்கள், அங்கு உணவைத் தயாரித்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே அயர்ந்து தூங்கியுள்ள சம்பவமொன்று வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், தனது படுக்கையில் இரண்டு பேர் தூங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவசர பொலிஸ் இலக்கமான 119 ஐ அழைத்துள்ளார்.

பொலிஸார் வந்தவுடன் திருடர்கள் விழித்திருத்தெழுந்ததோடு, அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். ஆயினும் மற்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற திருடனைக் கைது செய்வதற்கான தேடுதல் நடைபெற்று வருகிறது.

வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments