வழமைக்குத் திரும்பியது வாட்ஸ்அப்

🕔 October 25, 2022

வாட்ஸ்அப் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் திடீரென செயலிழந்திருந்த ‘வாட்ஸ்அப்’ சற்று நேரத்துக்கு முன்னர் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (Server – Side) ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணம் என, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னைய செய்தி

வாட்ஸ் அப் திடீரென செயலிழந்துள்ளதுள்ளது.

இதனால் பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாமலுள்ளது.

செயலிழப்பு கண்டறிதல் இணையதளம் ( DownDetector) ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு வாட்ஸ்அப் வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆயினும் வாட்ஸ்அப் இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இதேவேளை ‘வாட்ஸ்அப்’ இன் கணக்குகளில், அதனைப் பின்தொடர்வோர், ‘வாட்ஸ்அப்’க்கு என்னானது என வினவிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்