பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் தொற்று நோய் அதிகரிப்பு

🕔 October 25, 2022

பாலியல் தொற்று நோய்கள் இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே – இந்த தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளன எனவும் கூறியுள்ளார்.

கடந்த வருடத்துடன் (2021) ஒப்பிடும் போது, இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஸ்பா’ சிகிச்சையை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டமை இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளமைக்கான காரணங்களில் ஒன்றாகும் எனவும் கூறியுள்ளார்.

பாலியல் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இருப்பதாக தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் கண்டறிந்துள்ளது.

பாலியல் ரீதியாக பரவும் நோய்களால் இளம் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை சில இளம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்