எரிவாயு விலை மீண்டும் குறைகிறது: லிட்ரோ அறிவிப்பு

🕔 October 24, 2022

ரிவாயு விலையை நொவம்பரில் மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் இன்று (24) தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் கடன்களை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.

“திறைசேரிக்கு லிட்ரோ நிறுவனம் செப்டம்பர் மாதம் 6.5 பில்லியன் ரூபாவையும், ஒக்டோபரில் 7.5 பில்லியன்ரூபாவையும் செலுத்தியது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் எரிவாயு விலைகளும் குறைந்துவிட்டதால், நொவம்பர் முதல் வாரத்தில் எரிவாயு விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

எரிவாயு விலையை லிட்ரோ நிறுவனம் கடைசியாக 2022 அக்டோபர் 05 அன்று குறைத்தது.

தற்போது, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் 4280 ரூபாவாகும். 05 கிலோ சிலிண்டர் 1720 ரூபா. 2.3 கிலோ சிலிண்டர் விலை 800 ரூபா.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்