முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும், ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கு: வரக்காபொலயில்

🕔 October 23, 2022

– அஷ்ரப் ஏ சமத் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும் 70வது ஊடகக் கருத்தரங்கு, வறாக்காப்பொல பாபுல் ஹசன் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

’21வது நுாற்றாண்டில் ஊடக உலகம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மீடியா போரம் தலைவா் சிரேஸ்ட ஊடகவியலாளர் புர்ஹான் பி. இப்திக்காா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை, வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி ஆசிரியா் சித்தீக் ஹனீபா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியாலர்கள் என்.எம். அமீன், எம்.ஏ.எம். நிலாம், தாஹா முஸம்மில், ஜாவித் முனவர், சமீஹா, அஸ்ரப் ஏ சமத் மற்றும் இஸ்பஹான் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நடத்தினர்.

கருத்தரங்களில் கலந்து கொண்ட மாணவா்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாபுல் ஹசன் தேசிய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கல்லுாரியின் அதிபா் எம்.ஜ. நசீரா, வரக்காப்பொல பிரதேச சபையின் தவிசாளர் சரத் சுமனசூரிய, பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தவைா் எம்.பி.எம். சரீப் மற்றும் கல்லுாரியின் பிரதி அதிபர் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மீடியா போரம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவ் வைபவத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் ஹனீபாவின் ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில், முஸ்லிம் மீடியா போரம் – அவருக்கு பொன்னாடை போர்த்தியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்