22ஆவது திருத்தம்; மூன்றிலிரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றியது: எதிராக ஒரு வாக்கு

🕔 October 21, 2022

ரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார். இவர் 19ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் கடந்த காலத்தில் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

19ஆவது திருத்தத்தில் இருந்தவாறு, இரட்டை பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றுக்கு தெரிவாவதும் இந்த திருத்தத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்றும், இன்றும் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்