‘புக்கர்’ பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலக்கவுக்கு ஜனாபதிபதி வாழ்த்து

🕔 October 18, 2022
ராணியிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும் ஹெஹான்

புக்கர் பரிசை (Booker Prize) பெற்ற இலங்கையில் பிறந்த ஷெஹான் கருணாதிலக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷெஹான் கருணாதிலக்கவின் ‘மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்’ ( The Seven Moons of Maali Almeida ) எனும் – அவரின் இரண்டாவது நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்துள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் பரிசு, இவ்வருடம் – தனது ரொக் பாடல்கள், திரைக்கதைகள் மற்றும் பயணக் கதைகளுக்காக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவின் ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மேடா’வுக்கு கிடைத்துள்ளது.

இந்த விருதுடன் கருணாதிலக்க 50,000 பவுண்ட்களைப் பெற்றுள்ளார். இது இலங்கைப் பெறுமதியில் 02 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும்.

லண்டனில் உள்ள பிரபல கச்சேரி அரங்கான ரவுண்ட் ஹவுஸில் நேற்று (17) நடைபெற்ற புக்கர் பரிசு வழங்கும் விழாவில், ஐக்கிய ராச்சியத்தின் ராணி கமிலா மற்றும் பாடகர் – பாடலாசிரியர் துவா லிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர் விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஆங்கிலம், சிங்கம் மற்றும் தமிழ் மொழியிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

சர்வதேச புக்கர் பரிசு – கீதாஞ்சலி ஸ்ரீ தனது இந்தி நாவலுக்காக வென்ற அதன் 2022 பதிப்பு, டோம்ப் ஆஃப் சாண்ட், பரிசை வென்ற முதல் இந்திய மொழிப் படைப்பு – அதே பிராந்தியங்களில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புப் படைப்புக்கு வழங்கப்படுகிறது.

தனது நாவலுடன் ஷெஹான் கருணாதிலக

Comments

புதிது பேஸ்புக் பக்கம்