கட்டணம் செலுத்தவில்லை: ரூபவாஹினியின் மின் விநியோகம் ‘கட்’

🕔 October 17, 2022

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று (17) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுவதாக ரூபாவாஹி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்காக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் மின்சார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்