இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்துக்குத் தெரிவான ஒலுவில் அல் – ஹம்றா மாணவர்களுக்கு பாராட்டு

🕔 October 17, 2022

– எஸ். அஷ்ரப்கான் –

லாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான  இலக்கியப் போட்டித்தொடரில் பங்கு பற்றி வெற்றிபெற்ற  ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலய மாணவர்கள் நான்குபேரில் மூவர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இலக்கிய போட்டியில், சிரேஷ்ட பிரிவு கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினை எம்.ஆர். இன்ஸமாம், அதி சிரேஷ்ட பிரிவு கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினை  யு. ஹிஸாம், அதி சிரேஷ்ட பிரிவு இலக்கிய நயம் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற எம்.எச். பாத்திமா சப்னம் ஆகியோர் பெற்று, தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

மேலும், சிரேஷ்ட பிரிவு கவிதை பாடல் போட்டியில் மூன்றாம் இடத்தினை மாணவி எச்.எப். ஹிமா பெற்றுள்ளார்.

குறித்த போட்டிகளுக்கு பயிற்றுவித்த பொறுப்பாசிரியர் ஜே. வஹாப்தீனின் நெறிப்படுத்தலில், அதிபர் யு.கே. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று (17) பாடசாலையில் – மேற்படி மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வலய தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்