வாகன விபத்தில் தம்பதியினரும் குழந்தையும் பலி

🕔 October 17, 2022

னுராதபுரம் பேராதனை வீதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதாகம சந்திக்கு அருகில் உள்ள மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் தம்பதியரும் அவர்களது குழந்தையும் உயிரிழந்துள்ளதாகவும், வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்