பொதுஜன பெரமுனவுடன் முரண்படும் அமைச்சர்கள்: புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கட்சி கோரிக்கை

🕔 October 16, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இருந்த அமைச்சரவையை நீடிக்காமல், புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடமொன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் கோட்டாபய அரசாங்கத்தில் செயற்பட்டவர்களாவர். அவர்கள் புதிய ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள பெருமளவிலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதால், தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக அவர்களைக் கருதக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

எனவே, தமது கட்சியின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்