மஹிந்தவின் வருகையின் போது நாவலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது

🕔 October 16, 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (16) நாவலப்பிட்டிக்கு சென்றிருந்த நிலையில், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்குமாறு இப்போராட்டத்தின்போது அரசாங்கத்துக்கு வலியுறுத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகி, மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார், கலைந்து செல்லுமாறும் போராட்டக்காரர்களை அறிவுறுத்தினர்.

இதன்போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்