‘வாடகைத் தாய்’ முறையின் கீழ், குழந்தை பெற்றெடுத்த நயன் – விக்கி தம்பதி: வாடகைத் தாய் பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள்

🕔 October 10, 2022

டிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு திருமணமாகி 04 மாதங்களான நிலையில், அவர்கள் வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், வாடகை தாய் பற்றி பலரும்கூகுளில் தேடி வருகின்றனர். வாடகை தாய் என்றால்  என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

வாடகை தாய் என்றால் என்ன? 

வாடகைத் தாய்மை என்பது அடிப்படையில் ஒரு வகை கர்ப்பம் ஆகும். ஏதோவொரு காரணத்திற்காக கர்ப்பம் ஆக முடியாத, வயிற்றில் குழந்தையை சுமக்க இயலாத அல்லது சுமக்க விரும்பாத ஒரு பெண்ணிற்காக மற்றொரு பெண் அதை செய்வதே வாடகைத் தாய்மை ஆகும்.

வாடகைத் தாய்மையின் கீழ், ஒரு பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் விந்தணு செலுத்தப்படும். பின்னர் அந்த கரு, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்பட்டு, குழந்தையை சுமந்து, இறுதியில் பெற்றெடுக்க வைப்பார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் இந்த முறையையே நாடுகிறார்கள்.

இந்த செயல்முறையானது பெற்றோர்களாக மாற முடியாத பலருக்கும் வரப்பிரசாதமாய் இருந்து வருகிறது. தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய வகை

பாரம்பரிய வகையின் கீழ், வாடகைத் தாய் – தந்தையின் விந்தணுவுடன் செயற்கை முறையில் கருவூட்டப்படுகிறார். இந்த பாரம்பரிய வாடகைத்தாய் முறையில், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுகிறார், ஏனெனில் கரு உண்டானது குறிப்பிட்ட வாடகைத்தாயின் கருமுட்டையில் தான்; மேலும் சில சமயங்களில், வாடகைத்தாயின் கருமுட்டையை கருவுறச் செய்ய பிற விந்தணு நன்கொடையாளர்களையும் பெற்றோர்கள் தேர்வு செய்கிறார்கள்.

கர்ப்பகால வாடகைத் தாய்

கர்ப்பகால வாடகைத் தாய் என்கிற வகையின் கீழ், கருமுட்டை தாயிடம் இருந்தும், விந்தணுவுடன் தந்தையிடம் இருந்தும் சேகரிக்கப்படும். அதாவது இரண்டுமே சட்டப்பூர்வ பெற்றோரிடமிருந்து பெறப்படும், இதன் கீழ் வாடகைத் தாய்க்கும், குழந்தைக்கும் உயிரியல் தொடர்பு இருக்காது.

வாடகைத்தாய்மை என்பது, அரசாங்கத்தால் கூறப்பட்ட ஒரு சட்ட செயல்முறையைப் பின்பற்றுவதை உள்ளடக்கியது. ஏனெனில் குழந்தையின் சட்டப்பூர்வ உரிமைகள் தொடர்பான எதிர்கால சிக்கல்கள் எதுவும் இருக்க கூடாது என்பதற்காக!

மேலும் பெற்றோர் மற்றும் வாடகைத் தாய்மார்கள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக மற்ற கர்ப்பங்களைப் போலவே, வாடகைத் தாய் முறையிலும் சில மருத்துவ அபாயங்கள் உள்ளன.

சமீப காலங்களாக, இம்முறையின் கீழ் குழந்தை பெற்றுக் கொள்வது உலகளவில் வளர்ந்து வருகிறது.

நன்றி: News 18 தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்