கட்டாரில் நடைபெறும் உலக உதைப்பந்தாட்டப் போட்டி பாதுகாப்பு கடமையில் ஈடுபட, இலங்கையிலிருந்து 950 பேருக்கு வாய்ப்பு

🕔 October 7, 2022

– அஷ்ரப் ஏ சமத் –

ட்டாரில் நடைபெறும் உலக கால்பந்தாட்டப் போட்டியின்போது, பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுவதற்காக இலங்கையில் இருந்து 950 பேர் இன்றும் (07) நாளையும் பயணமாகின்றனா்.

10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் – நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்தவர்களே இவ்வாறு 03 மாதங்களுக்கும் மட்டும் வீசா வழங்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

இவா்கள் மருத்துவச் சான்றிதழுக்காகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலும் 10 ஆயிரம் ரூபா மட்டுமே செலுத்தினாா்கள். ஏனைய செலவுகள் அனைத்தும் இலவசமாக கட்டாா் நாட்டில் உள்ள முகவர் நிலையங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது.

அங்கு 02 லட்சம் முதல் 03 லட்சம் ரூபா வரை சம்பளம், மேலதிக கொடுப்பனவு, தங்குமிட வசதி, சீருடை போன்றவை இவர்களுக்கு இலவசமாக கட்டாரிலுள்ள கம்பனியினால் வழங்கப்படுகின்றது.

ராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் கடமையாற்றிவர்களே இவர்களில் அதிகமானோராவர். ஆங்கிலப் பரீட்சையில் சிித்தியடைந்துவா்களே இதற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இவா்கள் 03 மாத காலம் முடிந்தவுடன் நாட்டுக்கு திரும்பி வருதல் வேண்டும்.

இவா்களுக்கான விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் வீசா என்பன பத்தரமுல்லையில் உள்ளவீடமைப்பு பயிற்சிக் கல்லுாாியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு இலங்கை நிருவாக சேவை ஓய்வு பெற்ற அதிகாரி அசோக எல்லகொட உரையாற்றுகையில்; “இலங்கை எதிர் நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையின் போது, கட்டாருக்கு இலவசமாகக் சென்று, அன்னியச் செலவானியை சம்பாதிப்பதற்கு உதவிய கட்டாருக்கு நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்