வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு

🕔 January 6, 2016

Meat - 097
வி
ல்பத்து தேசிய பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மரைகளை வேட்டையாடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 05 சந்தேக நபர்களில் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வில்பத்து தேசிய பூங்காவுக்கு உரிய விலச்சிய கஜுவத்த குட்டியன்குளம் பிரதேசத்திலேயே இந்த சட்ட விரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்து 110 கிலோ கிராம் இறைச்சியும் , மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, நேற்று செவ்வாய்கிழமை இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேட்டையில் ஈடுபட்ட மற்றைய 04 சந்தேக நபர்களும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்