எட்டு அமைச்சர்கள் இன்று நியமனம்; ஹாபிஸ் நசீருக்கு மீண்டும் சுற்றாடல்: இதுவரை 21 பேருக்கு பதவி

🕔 May 23, 2022

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மேலம் சிலர் இன்று (23) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:

01. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்

02. பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

03. கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்

04. மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்

05. ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சர்

06. விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

07. ஹாபிஸ் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர் (இவருக்கு ஏற்கனவே இந்தத் துறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது)

08. ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

ஏற்கனவே அமைச்சுப் பதவி ஏற்றவர்கள் விவரம்

01. நிமல் சிறிபால டி சில்வா: துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து

02. கெஹலிய ரம்புக்வெல்ல: சுகாதாரம்

03. ரமேஷ் பத்திரன : பெருந்தோட்டம்

04. சுசில் பிரேமஜயந்த: கல்வி

05. விஜேதாச ராஜபக்ஷ: நீதி

06. டிரான் அலஸ்: பொதுமக்கள் பாதுகாப்பு

07.ஹரின் பெனாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி

08. மனுஷ நாணயக்கார: தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

09. நலின் பெனாண்டோ: வர்த்தகம்

14ஆம் திகதி ஆரம்பத்தில் பதவியேற்றவர்கள்

01. ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகாரம்

02. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

03. பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

04. காஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் வலுசக்தி

Comments