பொலித்தின் தடை இன்று முதல் அமுல்

🕔 January 1, 2016

Lal Mervin Dharmasiri - 021பொலித்தின் தொடர்பான தடை இன்று ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

அந்த வகையில், மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் வகையினை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் வைத்திருப்பது சட்டவிரோதமாக அமையும் என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்