மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு
🕔 December 31, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவும், முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும், நேருக்கு நேராக இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா நிகழ்வில் மேற்படி இருவரும் கலந்து கொண்டபோதே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மேற்படி நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மைத்திரி மற்றும் மஹிந்த ஆகியோர் நேரடியாகச் சந்தித்துக் கொண்டனர்.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவை மிகவும் காரசாரமாக விமர்ச்சித்து வரும், அமைச்சர் ராஜித சேனாரட்னவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.