மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை

🕔 December 28, 2015
Mahinda - 0134வெளிநாடு செல்வதற்கு தனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை, மாரவல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வழிபாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர், மக்களிடம் பேசியபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டார்.

தன்னைப் போலவே, மேலும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஆட்சியில் இவ்வாறு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்