10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

🕔 December 28, 2015

Ravi karunanayaka - 013மைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது.

அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரவி கருணாநாயக்கவிடமுள்ள நிதியமைச்சு, கபீர் ஹாசீமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக அமைச்சுப் பதவி வழங்கப்படலாமெனவும் நம்பப்பபடுகிறது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு மேலும் பல பொறுப்புகள் வழங்கப்படலாமெனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்