இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு

🕔 May 3, 2022

நாடாளுமன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றினை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சமர்ப்பித்தது.

இரண்டு பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்தப் பிரேரணைகளை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையும், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள குற்றப் பிரேரணை ஆகியவற்றில் ஏப்ரல் மாதம் கையொப்பமிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்