பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம்

🕔 December 27, 2015
Mosque - 014
– எம்.எம். ஜபீர் –

ம்பாறை மாவட்டம் 06ஆம் கொலனி, சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல் -மஸ்ஜிதுல் ரௌழா பள்ளிவாசலின் சுற்று வேலி, நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எனவே, பழைய பள்ளிவாசலை உடைத்து விட்டு,  தற்போது புதிய பள்ளிவாசல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

டுபாய் நாட்டின் 02 மில்லியன் ரூபாய் நிதியில், முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் மேற்படி புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் சம்பவத்தை கேள்வியுற்றதும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து சேதமாக்கப்பட்ட சுற்று வேலியினைப் பார்வையிட்டார்.

இதேவேளை, இப்பிரதேசத்தில் வாழும் இரு சமூகத்தவர்களும் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும் வாழ்வதற்கு, எதுவித அசம்பாவிதமுமின்றி பள்ளிவாசல் நிர்மாண வேலையை முன்னெடுக்குமாறும் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்  ரஹ்மத் மன்சூர் ஆகேியோரும் வருகை தந்திருந்தனர்.Mosque - 015Mosque - 012Mosque - 013

Comments

புதிது பேஸ்புக் பக்கம்