தலைப்புச் செய்திகள்

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிருந்து தெஷார ஜயசிங்க ராஜிநாமா

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து தெஷார ஜயசிங்க விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தமது கடிதத்தில் அறிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் இவர் திடீரென நிதி அமைச்சினால்ட பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இவர் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.