
சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (08) இரவு முதல், அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இன்று இரவு தொடக்கம் கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய கடன்களை செலுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.



