
நிதியமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நேற்று (04) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் சப்ரியும் அங்கம் வகித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அலி சப்ரி அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் மக்கள் போராட்டத்தில், அலி சப்ரியை பதவி துறக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து, பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



