தலைப்புச் செய்திகள்

அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று சபையில் வெளியிடப்பட்டது.

இதன்படி அரசாங்கத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகுவதாக அறிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.