
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் கருப்பொருளான ‘வெட கரன அபே விருவா’ பாடலின் இசையமைப்பாளர் – பிரபல கலைஞர் பசன் லியனகே மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
‘பாடலினால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள லியனகே; நாட்டைக் கட்டியெழுப்ப புதிய குழுவொன்றிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.



