தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

🕔 March 14, 2022

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்மூலம், 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபா. 22 காரட் தங்கப் பவுண் ஒன்று 139,000 ரூபாவாகும்.

தங்கத்தின் விலை உயர்வால் உள்ளூர் சந்தையில் தங்கத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தங்க வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124,000 ரூபாவை கடந்திருந்தது.

இலங்கையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்