ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

🕔 March 1, 2022

லகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம், மேலும் 0மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்த ஜனாதிபதி செயலணியை நியமித்தார். பின்னர் செயலணிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் 2022 பெப்ரவரி 28ஆம் திகதி ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்றிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர் குழுவின் கருத்துக்களைப் பெறுவது அவசியம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மேற்கூறிய செயலணியின் காலத்தை 28 பிப்ரவரி 2022 முதல் – மூன்று (03) மாதங்களுக்கு ஜனாதிபதி நீடித்துள்ளார்.

இலங்கைக்குள் ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வினை மேற்கொண்டு, அந்த நோக்கத்துக்காக ஒரு வரைவுச் சட்டத்தை தயாரிக்குமாறு, இந்த செயலணியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments