22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

🕔 February 2, 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments