பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

🕔 December 6, 2021

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனவை காப்பாற்ற முயற்சித்த அவரின் நண்பரை கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பரை கௌரவித்து, ‘தம்கா ஐ சுஜாத்’ (Tamgha i Shujaat) விருதினை வழங்கவுள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்தவை வன்முறை கும்பலிடமிருந்து காப்பாற்றுவதற்கும், அவருக்கு பாதுகாப்பளிப்பதற்கும் முயன்ற அவரின் நண்பர் மலிக் அத்னான் என்பவரின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலுக்கு தேசத்தின் சார்பில் நான் மரியாதை செய்கிறேன் (salute) எனவும் இம்ரான்கான் தனது ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்தவை உடல்ரீதியில் பாதுகாக்க முயன்றதன் மூலம் தனது உயிரையும் பணயம் வைத்த அத்னானுக்கு ‘தம்ஹா ஐ சுஜாட்’ விருதினை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்