‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

🕔 May 31, 2015

Kanalan DO -01– வி. சுகிர்தகுமார் –

இன, மத, மொழி வேறுபாடின்றி  – வறிய மக்களுக்காக, ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக  திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. குணாளன் தெரிவித்தார்.

சர்வதேச ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பானது, மொறிசியஸ் நாட்டின் உதவியுடன் செயற்படுத்தும் வெள்ள நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வலயக் கல்விப் பணிப்பாள் குணாளன் மேற்கண்டவாறு கூறினார்.

‘இஸ்லாமிக் ரிலீப்’ நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இப்றாகிம் சப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட,  ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வலயக் கல்விப் பணிப்பாளர் குணாளன் இதன்போது மேலும் கூறுகையில்;

“எந்த இடத்தில், எப்பொழுது, எந்த தேவை இருக்கின்றதோ – அந்த தேவை கருதி, உதவி செய்கின்றவர்களே உண்மையான உதவியாளர்கள். அவ்வாறான உதவியாளர்கதான் ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர்.

இன. மத, மொழி வேறுபாடின்றி நல்ல சிந்தனை கொண்டவர்களாக  ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் செயற்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

நீர் பெறுவதற்கான உதவிகள், பண உதவிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரண உதவிகள் என்று, பல்வேறு துறைசார்ந்த உதவிகளை வறிய மக்களுக்காக இவர்கள் வழங்கி வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் கடந்த கால யுத்தம் நீங்கி அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், வறுமையானது கல்விக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்ட இஸ்லாமிக் ரிலீப் அமைப்பினரும் இவர்கள் போன்றோரும் –  பல்வேறு உதவிகளை புரிந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

வறுமையை காரணம் காட்டி ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி தங்களது தொழிலுக்கு உதவியாக வைத்துள்ளனர். பெரும்பாலும் பின்தங்கிய பிரதேசங்களிலேயே இவ்வாறு இடம்பெறுகின்றது. ஆகவே பெற்றோர்கள் வறுமையைத் தாண்டியும் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பாடுபட வேண்டும்.

கல்விதான் வாழ்க்கையின் முழுமையான சொத்து. எனவே கற்றவனாக இரு. அல்லது கற்பிப்பவனாக இரு. அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு. கல்விக்கு தடையான நான்காவது நபராக இருந்து விடாதே” என்றார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Kanalan DO - 02Kanalan DO - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்