முகம்மது நபியை காட்டூனாக வரைந்தவர், பொலிஸ் பாதுகாப்பில் செல்லும் போது விபத்தில் பலி

🕔 October 4, 2021

முகமது நபியை கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய லார்ஸ் வில்க்ஸ் (Lars Vilks) என்பவர், வீதி விபத்தில் மரணமடைந்தார்.

பொலிஸாரின் வாகனம் ஒன்றில் அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர்.

இதில் சதி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியை கார்ட்டூன்களாக வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அல் – கொய்தா இயக்கம் அவரது உயிருக்கு 01 லட்சம் டொலர் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்