ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா?

🕔 October 2, 2021

ரோஹித ராஜபக்ஷவின்காணாமல் காணாமல் போன பூனை 3000 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் 06 லட்சம் ரூபா) தெரியவந்துள்ளது.

பத்தகன பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த நிலையில் காணமல் போன பெறுமதியான இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள பூனை துருக்கிய அங்கோரா (Turkish Angora) வகையை சேர்ந்ததாகும். இது பழங்கால – இயற்கை பூனை இனமாகும், இது மத்திய அனடோலியாவில் (இன்றைய துருக்கி, அங்காரா பகுதியில்) தோன்றியது.

17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை பூனைகளின் இனப்பெருக்கம் காணப்பட்டதற்கான பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இனப் பூனைகள் அங்கோரா (Angora) அல்லது அங்காரா (Ankara) பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

துருக்கிய அங்கோரா (Turkish Angora) பூனைகளின் விலை சராசரியாக 900 – 1500 டொலர்களாகும். எனினும் உயர் இனம், நிலையான உடலமைப்பு, அழகான இனங்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட இனப்பெருக்கப் பண்ணைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் இந்த வகைப் பூனைகள் 1800 முதல் 3000 டொலர் வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்