சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்: இலங்கை குறித்து பெருமிதம்

🕔 September 15, 2021

லங்கை சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் 21,919,413 மக்கள்தொகையில், 10,672,627 பேருக்கு இன்றைய (15) நிலவரப்படி கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அதன் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டாவது ‘டோஸ்’ஸை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பெற்றுக் கொண்ட நாடாக உலக வரைபடத்தில் மிகச்சில நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பது அதிர்ஷ்டம் என்று நேற்று அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஜி7 நாடுகள் என்றும், அவற்றில் நான்கு நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்