கூட்டுத் தொழுகைகளை நிறுத்துமாறு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அறிவிப்பு

🕔 August 16, 2021

னைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐவேளை கூட்டுத் தொழுகைகள், ஜும்ஆ மற்றும் ஜனாஸா தொழுகைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் கட்டுப்பாடுகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையிலான 2021.08.15ஆம் திகதி அறுவுறுத்தலுக்கேற்ப இலங்கை வக்ப் சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

  1. பள்ளிவாசல்களில் தனிமையாகத் தொழுவதற்கு எந்த நேரமும் அதிகபட்சம் 25 பேர்களை மாத்திரம் அனுதிக்கவும்.
  2. ஐவேளை ஜமாத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, ஜனாஸா தொழுகை, அல்குர்ஆன், நிகாஹ் மஜ்லிஸ்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்துக் கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்த வேண்டும்.
  3. சுகாதார/பாதுகாப்பு தரப்பினரின் விதிமுறைகள் மற்றும் வக்ப் சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுதல் வேண்டும்.
  4. அதனடிப்படையில் முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், சொந்த தொழுகை விரிப்பை எடுத்துச் செல்லுதல் மற்றும் வீட்டிலிருந்து வுழு செய்து கொண்டு செல்லுதல் கட்டாயமாகும்.
  5. பள்ளிவாசல்களில் வுழு செய்யும் பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் மூடப்படுதல் வேண்டும்.
  6. தனிமைப்படுத்தப்பட்ட/முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள்களும் மூடப்படுதல் வேண்டும்.
  7. மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது சாத்தியமற்றது/இயலாதது எனக் கருதினால், பள்ளிவாசல்களை முற்றாக மூடி வைப்பதற்கு நம்பிக்கையாளர்களுக்கு/நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்