வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது

🕔 August 13, 2021

கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, தம்வசம் வைத்திருக்க வேண்டுமென ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் நடமாடும் போது, பொதுமக்கள் இது தொடர்பில் சோதனையிடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைகள், உணவகங்கள் மற்றும் சுப்பர் மார்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வோர் தம்முடன் – கொவிட் தொற்றுக்கு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டமைக்கான அட்டையைக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் ராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்