நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து

🕔 August 11, 2021

கேகாலையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர், கொரோனாவை சுகப்படுத்தும் எனக் கூறித் தயாரித்த ‘பாணி மருந்து’க்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (11) கலந்து கொண்டு பேசிய – ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.

“தற்போது வரை 14 மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, அவை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்துக்கு நாங்கள் தற்காலிக அனுமதி வழங்கினோம். ஆனால் அது மருத்துவ சோதனைகளில் வெற்றிபெறவல்லை” என்று, தம்மிக்க பண்டாரவின் ‘பாணி மருந்து’ தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு ஆணையாளர் பதிலளித்தார்.

தம்மிக்க பண்டாரவின் மேற்படி பாணி மருந்தை அவர் இலவசமாக வழங்கியமையினை அடுத்து – அதனை அதிகளவு பொதுமக்கள் முண்டியடித்து பெற்றிருந்தனர்.

மேலும் அந்த மருந்தை உட்கொண்ட பின்னர் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உள்ளிட்டோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்