மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல்

🕔 August 10, 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தக் கட்டுபாடு அமுலுக்கு வருவதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, அத்தியவசியத் தேவைகளுக்கு அன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணங்ளை மேற்கொள்ள முடியாது.

இதேவேளை, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்