அரச பணியாளர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறையில் மீண்டும் திருத்தம்

🕔 August 6, 2021

ரச ஊழியர்களை பணிகளின் பொருட்டு அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு பணிக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்