கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

🕔 August 5, 2021

ரண்டு முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்துதலுக்கு மேலதிகமாக மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமென அவர் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகள் மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளன.

எனினும், வறிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் அடிப்படையில் சில வறிய நாடுகளில் மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதமானோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெய்ட்டி மற்றும் கொங்கோ குடியரசு போன்ற நாடுகளில் இரண்டாவது தடுப்பூசி எவருக்கும் செலுத்தப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள இந்தோனேசியாவில் அதன் மக்கள் தொகையில் 7.9 சதவீதமானோருக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்