முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

🕔 July 18, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நியமனத்துக்கு முன்னதாக கடந்த வாரம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை துமிந்த சில்வா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து துமிந்த சில்வா செய்த மேன்முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்