கோதுமைப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

🕔 July 9, 2021

கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருகட்டமாக குறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்