அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 04 பகுதிகள் திறந்து வைப்பு

🕔 July 4, 2021

– நூருல் ஹுதா உமர் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு(ICU), விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வறை (Consultant Longue), வைத்தியசாலை நூலகம்(Hospital Library) மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவு (Physiotherapy unit) என்பன நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அகமட் ஸகி கலந்து கொண்டு மேற்படி பகுதிகளை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா சிறப்பு நிகழ்வில் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை நலன்விரும்பிகள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்