‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனத்திடமிருந்து மருத்துவ உபகரணங்கள் அரசுக்கு அன்பளிப்பு: பிரதமர் மஹிந்த பெற்றுக் கொண்டார்

🕔 July 3, 2021

லங்கை ‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனம், 30 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை அரசுக்கு அன்பளிப்பாக வழஙகியுள்ளது.

மேற்படி மருத்துவ உபகரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை அலறி மாளிகையில் இடம்பெற்றது.

இதற்கு முன்னரும் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும், சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற போதும், 2019 ஏப்ரல் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதும், முஸ்லிம் எய்ட் நிறுவனம் அரசுடன் இணைந்து பல்வேறு உதவித் திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய ராச்சியத்தில் தமையகத்தைக் கொண்டு 1985ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ‘முஸ்லிம் எயிட்’, இதுவரை சுமார் 20 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் இணைந்து நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.

குறித்த உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்