சட்டத்தரணி ஏ.எம். தாஜ், தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக நியமனம்
– முன்ஸிப் அஹமட் –
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக ஏ.எம். தாஜ் நியமனம் பெற்றுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1995ஆம் ஆண்டு – பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவர், 2006ஆம் ஆண்டு முழு நேர அறிப்பாளரானார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் – ஒரு சட்டத்தரணியாவார்.
அக்கரைப்பற்றை சேர்ந்த ஏ.எம். தாஜ், ஒலிபரப்பு துறையில் இணைவதற்கு முன்னர் கவிதை மற்றும் ஓவியத்துறைகளில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் செயற்பட்டு வரும் தாஜ்; அவரின் கவிதைகளைத் தொகுத்து ‘இருக்கும் வரை காற்று’ எனும் புத்தகத்தை 2012ஆம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டார்.
ரூபவாஹினி ‘நேத்ரா’ அலைவரிசையில் ஒளிபரப்பாகும் ‘சதுரங்கம்’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சியை – மிக நீண்ட காலமாக தாஜ் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.