சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

🕔 June 9, 2021

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது.

கொவிட் நோய்த்தடுப்பு தொடர்பான தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, மொத்தம் 1,033,028 பேர் சினோபார்ம் தடுப்பூசிகளின் முதல் டோஸ் இனைப் பெற்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்