முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

🕔 November 24, 2015

Anura kunara disanayaka - 012ழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிண்டல் செய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலான 02 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து, சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

இதன்போது அநுரகுமார திஸாநாயக்க தவறான வழியில் நாடாளுமன்றில் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பதில் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments